சர்வதேச விண்வெளி மைத்தில் சுமார் 9 மாத காலம் இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நடப்பது கடினம்
9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் இருந்ததால் baby feet அதாவது குழந்தைகள் பாதங்கள் போன்று அவர்கள் பாதங்கள் இருக்கும் என்றும், இதனால் நடக்கும்போது வலி ஏற்படும் எனக் கூறுகின்றனர்.
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், இதயத்தின் செயல்பாடு எளிதாகிவிடும். பூமிக்கு திரும்பியதும் அவர்கள் இதயம் வேகமாக துடிக்கும் என்றும், எலும்புகளின் அடர்த்தி குறையும் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
புற்றுநோய் வர வாய்ப்பு
விண்வெளியில் இருந்ததால் cosmic radiation தாக்கம் உடலில் ஏற்பட்டிருக்கும். இதனால், தோல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 20ஆம் தேதிக்குள் இருவரும் பூமிக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் இருவருக்கும் உடல் மற்றும் மன ரீதியான ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள நாசா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.