தளபதி விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படம் 20 வருடங்களை நிறைவு செய்யும் பொருட்டு, படத்தின் தயாரிப்பாளாரான கலைப்புலி தாணு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் விதத்தில், சச்சின் திரைப்படத்தை ரீ - ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் அந்நாளை எதிர்பாத்து உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
வரும் மார்ச் 28 ஆம் தேதி சச்சின் திரைப்படம் மறு வெளியீடு செய்வதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது சச்சின் 28 ஆம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளியீட்டு தேதியில் மாற்றம் இருப்பதால், கூடிய விரைவில் புது வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் எனவும் எதிரிபார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரா தீரன் சூரன் திரைப்படமும் அந்நாளே வெளியாவது தான் என்கின்றனர். விக்ரமின் படத்திற்கும், விஜயின் மறுவெளியீடு செய்யப்பட்ட படத்திற்கும் இடையே திரையரங்குகளில் போதிய திரை வசதிகள் கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், சச்சின் படத்தின் திரை வெளியீடு பின்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
சச்சின் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வரை ரசிகர்கள் அனைவரும் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும். படம் திரையில் வெளியானதும் சச்சின் , ஷாலினியை கொண்டாட பல ரசிகர்கள் ஆரவாரமாக இருந்து வருகின்றனர். சச்சின் வெளியான ஆரம்ப காலக்கட்டத்தில் வசூல் ரீதியாக எதிரிபார்த்த அளவு இல்லை என்றாலும், அதே திரைப்படத்தை தான் ரசிகர்கள் தொலைக்காட்சி , சமூக வலைத்தளங்களில் என இன்றும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாது சச்சின் திரைபடத்திற்கென தனி ரசிகர் பாட்டாளமும் இருந்து வருகின்றனர் என்பது ஆச்சர்யத்தையே உண்டாக்குகின்றன.