மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தமது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு காரில் பறப்பட்டார் இன்று காலை, தருமபுரியின் பாறையூர் அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. நடிகர் டாம் சாக்கோவின் தந்தை, 70 வயதான சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மதியா கார்மில், சகோதரர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர். டாம் சாக்கோவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காரை டாம் சாக்கோவின் மேனேஜர் ஓட்டி சென்றுள்ளார். விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மலையாள நடிகர் ஷை ன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா, டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, ஷூட்டிங்கில் போதையில் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் டாம் மீது புகார் கூறியிருந்தார். கடந்த 2015ம் ஆண்டும் இவர் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.