Economics News

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்!


வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்!

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன் படி ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்.5ம் தேதி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருந்தது.


கடந்த ஏப்ரல் 9ம் தேதி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தை 6%ல் இருந்து 5.5% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய 3 தவணைகளை சேர்த்து, கடந்த 6 மாதங்களில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விகிதமாகும். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை

குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும். வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

For more details and updates, visit Thagavalulagam regularly!