தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி ஆபரண தங்கம் ஒரு சவரன் 71,560 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 11ம்தேதி ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 72,160 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,360 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 9,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 3000 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை 74 ஆயிரத்தை கடந்ததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.