India News

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு


நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

MBBS, BDS கால்நடை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த இளநிலை படிப்புகளுக்கும், நர்சிங் படிப்புக்கும் கடந்த மே 4ம்தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடந்தது. 557 நகரங்களில் 22 லட்சத்து 09 ஆயிரத்து 318 பேர் இந்தாண்டு நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை  இன்று வெளியிட்டது.


தேர்வெழுதிய 22 லட்சம் பேரில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெண்கள் 7 லட்சத்து 22 ஆயிரத்து 462 பேர். ஆண்கள் 5 லட்சத்து 14 ஆயிரத்து 063 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் மகேஷ்குமார் 99.99 பர்சன்டைல் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றார். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரத்து 715 பேர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 76 ஆயிரத்து 181 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 27வது இடமும் பெற்றுள்ளார். அபிநித் நாகராஜன் தேசிய அளவில் 50வது இடமும், புகழேந்தி 61வது இடமும், ஹிரிதிக் என்ற மாணவர் 63வது இடமும், ராகேஷ் 78வது இடமும், பிரஜன் ஸ்ரீவாரி 88வது இடமும் பெற்றுள்ளனர்.


நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in,  nta.nic.in  மற்றும் exams.nta.ac.in போன்ற இணைய முகவரிகளில் பார்க்கலாம்

For more details and updates, visit Thagavalulagam regularly!