சவுதி அரேபியாவில் கடந்தாண்டு ஹஜ் காலத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா, வேலை விசாவை உட்பட இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா உள்ளிட்ட விசா வாயிலாக வந்தவர்கள், ஹஜ் பயணத்தில் சட்டவிரோதமாக பங்கேற்றனர்.
இதனால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் பலர் இறந்தனர். இதன் காரணமாக இந்தாண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. அதன்படி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்டவை வேலை விசா, இ - விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹஜ் காலம் நடைபெற்று வருவதால், கடந்த மாதமே துவங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தில் இந்த விசாக்களை பயன்படுத்தி வருவதை தடுக்கவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.