இந்திய அஞ்சல் துறையின் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் (India Post GDS Result 2025) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 21,413 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,292 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி ?
தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான
https://indiapostgdsonline.gov.in/ல் சென்று காணலாம்.
முடிவுகளை பார்க்க வேண்டிய வழிமுறைகள்:
1.இணையதளத்தைத் திறக்கவும்.
2.GDS Online Engagement Schedule-1, January-2025 என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
3.உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யவும் (தமிழ்நாட்டின் முடிவுகளை பெற Tamil Nadu என்பதை கிளிக் செய்யவும்).
4.தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் PDF வடிவில் திறக்கும்.
5.உங்களுடைய பெயர் மற்றும் விண்ணப்ப பதிவு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தேர்வு நிலையை உறுதிப்படுத்தலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை
தேர்வு செய்யப்பட்டவர்கள் 07.04.2025க்குள் அவர்கள் பணியிடத்திற்கு ஒதுக்கப்பட்ட தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று அவைரின் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்களை சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அதிகாரப்பூர்வ பணியிட நியமனம் வழங்கப்படும்.
வயது மற்றும் கல்வித் தகுதிகள்
1.குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயது
2.எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு
3.ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு
4.மாற்றுத்திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகள் தளர்வு
5.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்த தளர்வும் இல்லை
கல்வித் தகுதி
1.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2.கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3.தமிழ் மொழியில் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றிருக்க வேண்டும்
4.கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறன் இருக்க வேண்டும்
சம்பள விவரம்
கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM): ரூ.12,000 – ரூ.29,380
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM): ரூ.10,000 – ரூ.24,470
முதல் லிஸ்ட் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், 4 அல்லது 5 லிஸ்ட் இதுபோல் வெளியாகும்.