GDS மெரிட் லிஸ்ட் விரைவில் வெளியாகும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா அஞ்சல் துறையில் காலியாக உள்ள GDS அதாவது Gramin dak sevak, கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) என 21, 413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 3ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு மெரிட் லிஸ்ட் முலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின்னர் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நிலையில், மெரிட் லிஸ்ட் விரைவில் வெளியாகும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
மெரிட் லிஸ்ட் பார்ப்பது எப்படி?
1.https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைய தளத்திற்கு செல்லவும்
2. தகுதி பட்டியல் PDF இணைப்பை கிளிக் செய்யவும்
3. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உட்பட தேவையான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
4.பின்னர் உங்கள் தகுதி பட்டியலை சரிபார்த்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் மட்டும் 2,292 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.