போலி வாக்காளர்களை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் வாக்களர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அண்மையில் பல மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், ஆதார் அட்டைகள் BIOmetric தரவுகளுடன் உள்ளதால் போலி வாக்களார்களை எளிதில் கண்டறியலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதுகுறித்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை கேட்டது.
இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமர் தலைமையில் இன்று டெல்லியில் இது குறித்து ஆலோசானை கூட்டம் நடந்தது. அதில், வாக்களர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து UIDAI, தொழில்நுட்ப நிபுணர்கள் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனைகளை தொடங்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950 பிரிவு 23ன் படி வாக்காளர் பதிவு அலுவலகம் வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற வேண்டும். கடந்த 2001 ஆம் ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.