விஜய் நடித்த சச்சின் படம் ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார்.
அண்மை காலமாக பழைய ஹிட் திரைப்படங்களை திரையரங்குகளில் மீண்டும் வெளியிடும் மரபு உருவாகியுள்ளது. ஆளவந்தான், தீனா, கில்லி, தளபதி போன்ற படங்கள் இதற்கு முன்பாக திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல், விஜயின் சச்சின் படத்திற்கும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம், காதல் மற்றும் காமெடி கலந்த குடும்பப் படமாக இருந்தது. ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடித்த இந்த படம், விஜய் - வடிவேலு கூட்டணியின் காமெடியால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, என்ன அய்யச்சாமி வரரட்டா போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு மறக்க முடியாதவை.
இந்நிலையில், விஜய் அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கிய நிலையில், அவரது சினிமா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவரின் பழைய திரைப்படங்களை திரையில் கொண்டாடும் வாய்ப்பால் அதிக மகிழ்ச்சியை தருகிறது. கில்லி ரீ-ரிலீஸ் 50 கோடிக்கு மேல் வசூலித்ததை தொடர்ந்து, சச்சின் படமும் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் ரசிகர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், ஏப்ரல் 18ல் திரையரங்கிற்கு வர தயாராகுங்கள் என ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர்.