India News

இந்தியாவை துண்டாடும் திமுக: அமித்ஷா


இந்தியாவை துண்டாடும் திமுக: அமித்ஷா

மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய அமித்ஷா, நீங்கள் வெகுதொலைவில் உள்ள அந்நிய மொழியை விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழிகளை எதிர்க்கிறீர்கள். மொழியின் பெயரால் திமுக நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறது. மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது எனக் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், இந்தி மொழி, இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் நண்பன். ஒவ்வொரு மொழியும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகும். எந்த ஒரு மாநில மொழியும் இந்தியாவில் புறக்கணிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

ஊழலையும், முறைகேடுகளையும் மறைக்கவே மொழி பிரச்சினையை எழுப்புகின்றனர் எனக் குற்றம்சாட்டிய அமித்ஷா, தமிழகத்தில் NDA அரசு ஆட்சி அமைக்கும்போது, நாங்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழங்குவோம் எனவும் கூறினார்.


அமித்ஷா பேச்சு வைகோ கண்டனம்

அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, இந்தியை எதிர்த்து 6 மாதம் ஜெயிலுக்கு போனாவன் நான். நாங்கள் உங்கள் இந்துத்துவா கொள்கை, ஆர்எஸ்எஸ் கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் வஞ்சிக்கிறார் எனக் குற்றம்சாட்டினார். உள்துறை அமைச்சர் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இந்தி கட்டாயமாக்கப்படும் என்று கூறினார். அதன்பிறகு தான் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி, 114 நாடுகளில் 120 கோடிக்கும் அதிகமானோர் தமிழ்மொழியை பேசுகிறார்கள் எனக் குறிப்பிட்ட வைகோ, தமிழ் ஒரு உலக மொழியாக திகழ்கின்றது என்றார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!