Taminadu Government

7,783 பேருக்கு அரசு வேலை..அங்கன்வாடியில் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்


7,783 பேருக்கு அரசு வேலை..அங்கன்வாடியில் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 7,783 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையில், அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பட உள்ளன. விண்ணப்பதாரர்களிடம் மாவட்ட வாரியாக நேர்முகத்தேர்வு நடத்தி, தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், 3,886 அங்கன்வாடி பணியாளர், 305 மினி அங்கன்வாடி பணியாளர், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

என்ன தகுதிகள் ?

அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பும், உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணிப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 49,500 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4,940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 54,440 மையங்கள் செயல்படுகின்றன. இதேபோல், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்பும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு  மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சத்துணவு அமைப்பாளர், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!