Cinema News

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினரின் புதிய ஹோம் ஸ்டுடியோ!


நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினரின் புதிய ஹோம் ஸ்டுடியோ!

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, தனியார் ஹோம் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 7,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ, பழங்கால பிரிட்டிஷ் பங்களா ஒன்றை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


அழகிய வடிவமைப்பு (ம) வசதிகள்..

இந்த ஸ்டுடியோவை நிகிதா ரெட்டி வடிவமைத்திருக்கிறார். இது பழமை & நவீனத்தன்மை இணைந்ததாக காணப்படுகிறது.


இதில்,

மாநாட்டு அறை
விருந்தினர்களுக்கான Lunch 
வெளிப்புற லாண்ட்ஸ்கேப் பகுதி
பின்புற வெளிப்புற உணவகம்
தனிப்பட்ட சந்திப்பு அறைகள்
உதவி இயக்குநர்களுக்கான சந்திப்பு அறை
பணியாளர்களுக்கான வசதிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


தொழிலுக்கு மட்டும் அல்ல…!

இந்த ஸ்டுடியோ, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது தொழில்பரிசோதனை, தனிப்பட்ட சந்திப்புகள், மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் கழிக்க உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ரசிகர்கள் உற்சாகம்!

ஸ்டுடியோவின் புகைப்படங்கள் & வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.


ஸ்டைலிஷ் தம்பதியினர் இன்னும் என்ன புதுமை செய்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!

For more details and updates, visit Thagavalulagam regularly!