தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 5ஆவது முறையாக அவர் தாக்கல் செய்யும் வேளாண் பட்ஜெட் ஆகும்.
வேளாண் துறைக்கு மொத்தமாக இந்த ஆண்டு ரூ.45,661 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், இந்திய அளவில் வேளாண் துறையில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். பட்ஜெட் உரையின் போது அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
1.நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்.
2.4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3.உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளுர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
4.உழவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும்
5. கடந்த 4 ஆண்டுகளில் 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது
6.இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. மேலும், இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும்
7.2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்