தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து அவைக்கு வந்தனர். பட்ஜெட் உரையின் போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு என பாடல் பாடியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அமைச்சர், அடுத்த நிதியாண்டில் விவசாய பயிர்க்கடன் ரூ.1,477 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். விவசாய பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட ரூ.12,110.74 கோடியில் ரூ.10,336.40 கோடி கடந்த 4 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
1.மல்லிகை பூ சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.6 கோடியும், ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடியும் ஒதுக்கீடு
2.மற்ற நாடுகளின் வேளாண் முறையை அறிய, 100 உழவர்களை, ஜப்பான், சீனா, வியட்நாமுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ரூ.2 கோடி ஒதுக்கீடு
3.சிறப்பு உயிர்ம வேளாண்மை நம்மாழ்வார் விருதுடன், 3 உழவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
4.நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடாக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்
5.திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் சிறப்பு திட்டத்திற்கு ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
6.3 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ரூ.24,000 கோடி ஒதுக்கீடு
7.3,580 கோடி அளவுக்கு வங்கிகள் மூலம் வங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும்
8. வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க 435 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
9. வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்
10.மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு
11.5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்
12.பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
13.வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு
14.பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
15.நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும்