சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி சவரனுக்கு ரூ.61,960க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 2 மாதங்களில் ரூ.66,000யை நெருங்கி வருகிறது. இந்த வருடத்தின் இறுதியில் சவரன் ரூ. 1லட்சம் தாண்டும் என நகை வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,210க்கும், சவரன் ரூ.65,680க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளிலேயே விலை சற்று குறைந்துள்ளது.
உயர்ந்து வரும் வெள்ளி விலை
இதனிடையே, இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கிராமுக்கு இன்று ரூ.1 உயர்ந்து ரூ.113க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 17 நாட்களில் மட்டும் கிலோவுக்கு வெள்ளி ரூ.8,000 வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.