விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று (மார்ச் 27) வெளியாவதாக இருந்தது. ஆனால் B4U தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் OTT உரிமம் விற்கப்படுவதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனிடையே, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் 2.5 கோடி ஒப்பந்தத்துடன் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், மாலை 5 மணிக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னர், மாலை 6 மணிக்காட்சி வெளியீடு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் அருண்குமார் உருக்கமாக, “விக்ரம் ரசிகர்களும், பொதுமக்களும் என்னை மன்னிக்க வேண்டும். என் தந்தையே 3 முறை தியேட்டருக்குச் சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பியுள்ளார். உங்கள் அவஸ்தைகளை உணர்கிறேன். இன்று மாலை படம் வெளியாகிறது, தயவுசெய்து ஆதரிக்கவும் எனக் கூறி வீடியோவில் வெளியிட்டார்.
முடிவாக, பல பிரச்சினைகளை கடந்து விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இன்று மாலை 6 மணிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.