Cinema News

ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி


ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், பராசக்தி படக்குழு பொங்கல் வெளியீட்டிற்காக திட்டமிட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் முதல் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. இதனால், அவரது மார்க்கெட் மட்டுமல்லாமல், சம்பளமும், அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய கமர்ஷியல் ஹீரோ சிவகார்த்திகேயனாகத்தான் இருப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

பராசக்தி – ஜனநாயகன்

விஜய் தற்போது தனது கடைசி படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், அமரன் அளித்த வெற்றியை பராசக்தியுடன் தொடர வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் உறுதியாக உள்ளனர். 2026 ஆம் ஆண்டு பொங்கலில் பராசக்தியும், ஜனநாயகனும் நேரடியாக மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

For more details and updates, visit Thagavalulagam regularly!