Political News

ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் எச்சரிக்கை


ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், ஒற்றை தலைமையால் வெற்றி பெறுவேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. எனவே, அவர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக வேண்டும். இல்லையெனில் அவமரியாதையை சந்திக்க நேரிடும் எனக் குறிப்பிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரை கட்சியில் சேர்ப்பதற்கான சாத்தியமே இல்லை என அவர் கூறினார்.

அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் அதிமுகவில் இணைந்து வருவதாகவும், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.-வின் ஒரே எதிரி தி.மு.க. மட்டுமே. ஒத்த கருத்துள்ள எந்தக் கட்சியும் எங்களுடன் இணையலாம் எனக் கூறினார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!