சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அவருக்கே வழங்குவது; ஆகஸ்ட்டில் மாநில மாநாடு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலையொட்டி, செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குவார் எனவும் முடிவு செய்யப்பட்டது. செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பரந்தூர் உட்பட விவசாயிகளின் உரிமைக்கு துணை நிற்பது; கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை; கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும்; ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரிப்பது; அரசு டாக்டர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்; கச்சத்தீவை குத்தகைக்கு மத்திய அரசு கேட்டு பெற வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விஜய் பேசும்போது, கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை; கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் தான் அமையும். அதுவும் திமுக, பாஜவுக்கு எதிராகத்தான் இருக்கும் என உறுதிபட கூறினார்.