தமிழக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்களின் பட்டியலில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா டுடே மற்றும் CVoter நடத்திய கருத்துக்கணிப்பின் படி, ஸ்டாலின் 27% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.
அரசியலில் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ள தமிழ் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அவர் 18% ஆதரவுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால், அவர் அரசியல் களத்தில் ஒரு முக்கியப் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) 10% ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தமிழகத் தலைவர் அண்ணாமலை 9% ஆதரவைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசு குறித்து மக்களின் மனநிலை பற்றிய தகவல்களும் கருத்துக்கணிப்பில் வெளிவந்துள்ளன.
மிகவும் திருப்தி: 15%
சிலளவு திருப்தி: 36%
திருப்தியற்றவர்கள்: 25%
தெளிவாக கருத்து தெரிவிக்க முடியாதவர்கள்: 24%
இந்த முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் சில மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. விஜயின் அரசியல் பிரவேசம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவர் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.