Political News

2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் தவெக


2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் தவெக

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.ஆளும் திமுக ‘ஓரணியில் தமிழகம்’ என்ற பெயரில் வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசின் திட்டங்களை கூறும் பணியை துவங்கியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக சார்பில், அதன் பொதுச்செயலர் பழனிசாமி, இன்று முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.நடிகர் விஜயின் தவெகவும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கட்சியின் செயற்குழுவில், முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.


கொள்கை எதிரிகளான திமுக மற்றும் பாஜ உடன் கூட்டணி இல்லை எனவும் விஜய் அறிவித்தார். இந்நிலையில், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.


இதுகுறித்து தவெக பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன், உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை, பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.


இதில் மாவட்டச் செயலர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை ‘லேப்டாப்’ உடன் அழைத்து வர வேண்டும். கட்சியின் மற்ற நிர்வாகிகளை, அழைத்து வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!