சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த டிராகன் விண்கலம் அன்டாக்கிங் மூலம் அதாவது விண்வெளி மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது X தளத்தில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டு Drogan separation confirmed எனப் பதிவிட்டுள்ளது. 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more details and updates, visit Thagavalulagam regularly!