சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கியுள்ள இந்திய வம்சாளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் ஆகியோரை அழைத்து வர spacex நிறுவனத்தின் Dragon Crew-10 விண்கலம் வெற்றிகரமாக புறப்பட்டது.
வில்மோர் (61), சுனிதா வில்லியம்ஸ் (58) ஆகிய இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். 10 நாட்கள் ஆய்வு செய்திவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் அவர்கள் தங்கி உள்ளனர்.
மீண்டும் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
கடந்த மார்ச் 13ஆம் தேதி சுனிதா மற்றும் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர, விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்ப நாசா முடிவு செய்தது. ஆனால், ஏவுதள அமைப்பில் ஹைட்ராலிக் கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த முயற்சி கைவிட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை spacex நிறுவனத்தின் Dragon Crew-10 விண்கலத்தின் மூலம் வரும் மார்ச் 16ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று அதிகாலை 4.33 மணிக்கு Dragon Crew ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விரைவில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.