நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவரது பேரனுக்கு உலக நாயகன், பத்ம பூஷன் கமல் ஹாசன் ‘நட்சத்திரன்’ என பெயர் சூட்டியுள்ளார். இதை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ள ரோபோ சங்கரின் மகள், நடிகை இந்திரஜா சங்கர், தனது சமூக வலைதளத்தில் இதைப் பற்றி எழுதியுள்ளார்.
இந்திரஜா சங்கர் பகிர்ந்த பதிவு
தங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்புத் தலைவர், பத்ம பூஷன் கமல்ஹாசன் ‘நட்சத்திரன்’ என பெயரிட்டு வாழ்த்தினார். இதை வாழ்நாளில் மறக்க முடியாது. எங்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துக் கொண்ட நினைவுகள் இவை. இதன் பின்னணியில், ரோபோ சங்கர் குடும்பத்தினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். குடும்பத்தினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்க, கமல்ஹாசன் குழந்தையை அன்போடு ஆசீர்வதித்தார்.
இதற்கு முன்பாக, ரோபோ சங்கர் தனது திருமண நாளை முன்னிட்டு, தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஒரே நாளில் தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் நடிகர்களையும் சந்தித்த அனுபவம், ரோபோ சங்கர் குடும்பத்திற்குப் பேரானந்தத்தை அளித்துள்ளது. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள இந்திரஜா சங்கர், “ஒரே நாளில் வாழ்வின் சிறந்த நினைவுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.