சமூக வலைதளங்களில் பிரபலமாகும் ரீல்ஸ் (Reels) உருவாக்குபவர்களுக்கு, வெறும் followers count அடிப்படையில் திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பது குறித்து, மூத்த நடிகை வடிவுக்கரசி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களின் தாக்கம்
இன்று ஒரு படம் உருவாகும்போது, நடிகர்களை தேர்வு செய்யும் முறை மாறிவிட்டது. முன்பு நடிப்புத் திறமை, பயிற்சி, மேடை அனுபவம் போன்றவை முக்கியமாகக் கருதப்பட்டன. ஆனால் இப்போது Instagram, TikTok, YouTube போன்றவைகளில் millions of followers உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
வடிவுக்கரசி கூறியது என்ன?
இப்போ followers count அதிகமா இருந்தா, நடிகர் நடிகையா நடிக்க வைப்பாங்க. ஆனா, நடிப்புப் பாத்து காஸ்ட் பண்ணுவாங்க என்ற நிலை இல்லை. அவர்களால reel ல ஒரு பாட்டு போட்டு வாய் அசைக்கலாம், ஆனா படத்துல உண்மையிலேயே நடிக்க சொல்லிட்டா திணறி விடுறாங்க. இதுல இயக்குநர்களோடதும் தவறு இருக்கு. வெறும் reach கருதி, திறமையை விட followers count அதிகம் இருந்தா தான் முக்கியம்' னு நினைக்கிறாங்க. இப்படித்தான் எல்லாரோட time waste ஆகுது," என்று நடிகை வடிவுக்கரசி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிப்புத்திறமை இல்லாத பிரபலங்கள் – படத்திற்கும் பிரச்சனை
வடிவுக்கரசி மேலும் “நடிக்கத் தெரியாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், படம் எப்படி சீராக போகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். இப்போ படம் எடுத்தாலும், எந்த கதாபாத்திரத்துக்கும் depth இல்லாம போயிடுது. இது எல்லாம், திறமையான நடிகர்கள் இருக்கிற இடத்தை சமூக வலைதள influence-ல் பிரபலமானவர்கள் பிடிக்கிறதால நடந்துட்டே இருக்கு," என்றார். நடிக்கத் தெரியாதவர்களுக்கு நிறைய takes, retakes ஆகும். டைமும் பறக்கிறது, செலவுகளும் அதிகமாகிறது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இதைப்பற்றி சிந்திக்கணும், என்றார்.
சினிமாவிற்கு உண்மையான திறமை தேவையா?
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பது தவறல்ல. ஆனால், அது மட்டும் திரைப்பட வாய்ப்புகளுக்கு அடிப்படை இல்லை. நடிப்பை கற்றுக்கொண்டு, உண்மையான அன்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டு ஒரு கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டும். இயக்குநர்கள் Followers அல்ல, True Talent தான் முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வடிவுக்கரசியின் கடைசி வார்த்தை
ரீல்ஸ் பண்ணிட்டு நடிக்க வரலாமா? வரலாம். ஆனா நடிக்கத் தெரியணும். இல்லனா, நீண்ட பயணம் இருக்காது" என்று நடிகை வடிவுக்கரசி தனது கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார்.