சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நடிப்புப் பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திடீரென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொண்டு, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வீடியோவில், 26/11 மும்பை தாக்குதல் குறித்து பேசும் ரஜினிகாந்த், பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டில் புகுந்து, பேரழிவை ஏற்படுத்தலாம் என்பதால் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது கண்காணிப்பு தேவை என குறிப்பிட்டுள்ளார். அருகிலுள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இது தேசிய பாதுகாப்புக்காக மக்களின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
சைக்கிள் பயணத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்த விழிப்புணர்வை அதிகரிக்க CISF வீரர்கள் 100 பேர், மேற்குவங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை 7,000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்ய உள்ளனர். மக்கள் அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுடன் குறைந்தது சில தூரமாவது நடந்து செல்ல வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.
ரஜினிகாந்தின் விழிப்புணர்வு வீடியோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது போன்ற சமூக பொறுப்புணர்வுப் பணிகள் தொடர வேண்டும் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.