நாட்டில் சாலை விபத்துகளை குறைத்து, வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உத்திரவிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனையாகும் அனைத்து வகை டூவீலர்களுடன் கட்டாயமாக, இந்திய தர நிர்ணயத்தால் (BIS) சான்றளிக்கப்பட்ட 2 ஹெல்மெட்டுகளை வழங்கவேண்டும் என்று கூறி உள்ளது.
இதேபோன்று ஏபிஎஸ் (ABS) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரேக் அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும்.
சாலை பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அமைச்சகம் விரைவில் வெளியிடும். நாடு முழுவதும் மொத்தமாக பதிவாகும் சாலை விபத்துகளில் இறக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் 44 சதவீதம் பேர். மேலும் தற்போது 125 CCக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே ABS பாதுகாப்பு கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.