India News

சிபிஐ என்ன செய்கிறது: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி


கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ தனது அறிக்கையை மார்ச் 28ஆம் தேதி அன்று நடைபெறும் அடுத்தக்கட்ட விசாரணையில் சமர்ப்பிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, இந்த பாலியல் குற்றம் ஒருவராகவே செய்தாரா அல்லது குழுவாக செய்தனரா என்பது குறித்து சிபிஐ ஆராய்ந்துள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்திய குற்றவியல் புதிய பிரிவான பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவின் கீழ் கூட்டு பாலியல் வன்கொடுமை அழைப்படுகிறதா என்பது குறித்து சிபிஐ உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா சியால்டா நீதிமன்றம்,  சஞ்சய் ராய்க்கு பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தி கீழ் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, சிபிஐ மேற்கொண்டுள்ள விசாரணையின் தன்மை குறித்து பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் சிபிஐயின் அறிக்கை வேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்டார். இதனையடுத்து, நீதிபதி, இது கூட்டு பாலியல் வன்கொடுமை? அல்லது ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யப்பட்டது என்று சந்தேகம் உள்ளதா? இதில், இன்னும் பல்ரை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வேண்டுமா என்ற பல கேள்விகளுக்கு சிபிஐ நேரடி விளக்கம் அளிக்க நீதிமன்றம் கூறியுள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!