சென்னை: ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சியாளர் ஹுசைனி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் கலைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஹுசைனியின் உடலுக்கு, நடன இயக்குநர் கலா மாஸ்டர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"கஷ்டமான தருணங்களில் கூட என்னுடன் இருந்தவர் ஹுசைனி. யாருக்காவது ஒன்று என்றால் உடனே ஓடி வந்து உதவி செய்வார். இவ்வளவு சீக்கிரமாக அவரை இழந்துவிடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்," என உருக்கமாக தெரிவித்தார்.
ஹுசைனியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.