India News

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு


ஜாதிவாரி கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து நடத்த மத்திய அரசு முடிவெடுத்தது.


பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியானது.


இந்த முடிவுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.


கணக்கெடுப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது


2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு மார்ச் 1, 2027ல் துவங்கும். அதே சமயம், லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் பனி சூழ்ந்த பகுதிகள், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் அக்டோபர் 1, 2026 முதல் கணக்கெடுப்பு தொடங்கும்.


2011ல் நடந்த கணக்கெடுப்பும் 2 கட்டங்களாகவே நடந்தன. 2021ல் நடத்த இருந்த கணக்கெடுப்பும் 2 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த்து. கொரானா காரணமாக அந்தக் கணக்கெடுப்பு நடக்கவில்லை என அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!