Cinema News

'ஜனநாயகன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு


'ஜனநாயகன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அரசியல் கலந்த படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

பொங்கல் 2026 வெளியீடு

KVN Productions தயாரிக்கும் இப்படம் 2026 பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான போஸ்டரில், விஜய் வெள்ளை உடையில், மக்கள் கூட்டத்தில் செல்பி எடுப்பது போன்ற காட்சி வைரலானது. இதன் பின்னணியில் அரசியல் போன்றவை படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்காக அனிருத் இசையமைத்து வருவதுடன்,விஜய்யின் கடைசி படமாகவும், அரசியல் பயணத்திற்கு அடித்தளமாகவும் ஜனநாயகன் அமையக்கூடும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

'GOAT' திரைப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் இந்தப் படம், விஜயின் கடை சி படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For more details and updates, visit Thagavalulagam regularly!