ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான Tom cruise, பிரபல நடிகை Ana de armas-ஐ காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அண்மையில், 60 வயதான ஆமீர்கான் தனது புதிய காதலியை அறிமுகம் செய்தார். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிரடி ஆக்சன் ஹீரோவாக ஹாலிவுட்டில் மாஸ் காட்டி வரும் முன்னணி நடிகரான Tom cruise (62), தன்னைவிட 26 வயது குறைவான நடிகை Ana de armas-ஐ காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
3 முறை விவாகரத்து செய்த Tom cruise லண்டன் விமான நிலையத்தில் ana de armas உடன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் இது குறித்து இரண்டு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாக வில்லை. நடிகை ana de armas, நடிகர் தனுஷ் நடித்த கிரே மேன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.