Tamilnadu News

திருப்பூர் பேருந்து நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


திருப்பூர் பேருந்து நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூர் பேருந்து நிலையத்திலேயே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது. 

திருப்பூரைச் சேர்ந்த சுமதி என்ற நிறைமாத கர்ப்பிணியான அவர் மருத்துவமனை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தூய்மை பணியாளர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்தது. தற்போது, தாய், சேய் இருவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. நிறைமாத கர்ப்பிணிகள் தனியாக வெளியே செல்லக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

For more details and updates, visit Thagavalulagam regularly!