தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட iந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். பல வருடங்களாக உறவில் நடந்த கருத்து முரண்பாடுகள், சமீப காலமாக பிரச்னையாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஆர்த்தி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து, மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சம் கோரியுள்ளார். இரு மகன்களின் பாதுகாப்பும், கல்வி செலவுகளும் இவரது பொறுப்பில் இருப்பதாகவும், அந்த காரணத்தினால் இந்த தொகையை கேட்கிறதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரும் சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. பேச்சுவார்த்தைகள் பல்வேறு சுற்றங்களாக நடந்தும், ரவி மோகன் தனது மனைவியுடன் இணைந்து வாழ விருப்பமில்லை எனவும், விவாகரத்தையே விரும்புவதாகவும் தெரிவித்து, ஆர்த்தியின் ‘சேர்ந்து வாழ வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரிக்க கோரியுள்ளார்.
ஆர்த்தியின் ஜீவனாம்ச கோரிக்கையை வைத்து ரசிகர்கள், “ரவி மோகனால் மாதம் ₹40 லட்சம் கொடுக்க முடியுமா?” என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ரவி மோகன் ஒரு படத்திற்கு ₹15 முதல் ₹25 கோடி வரை சம்பளம் பெறுகிறார். வரும் காலத்தில் அவர் ‘பராசக்தி’, ‘ஜீனி’, ‘தனி ஒருவன் 2’ போன்ற படங்களில் நடிக்கவுள்ளார். இருந்தாலும், ஒரு வருடத்திற்கு ₹4.8 கோடி ஜீவனாம்சம் வழங்குவது சவாலாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 12 அன்று நடைபெறவுள்ளது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்புகளை முறையாக விளக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.