Cinema News

சினிமா ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட் தான்..


சினிமா ரசிகர்களுக்கு நாளை செம ட்ரீட் தான்..

நாளை 2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 படங்கள் வெளியாக உள்ளன சினிமா ரசிகர்களே.

புதிய படங்கள் என்ன என்ன?

கே.ரங்கராஜ் இயக்கத்தில் காதல் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், பூஜிதா,  நளினி, டெல்லி கணேஷ், சாம்ஸ், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி. மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம் நாளை திரைக்கு வருகிறது.

தங்கப்பாண்டி இயக்கத்தில் கிராமத்து கதையை மையமாக கொண்ட படமாக உருவாகியுள்ள ”மாடன் கொடை விழா” படமும் நாளை ரீலிஸ் செய்யப்படுகிறது.

தண்ணீர் சேமிப்பை கதையாக வைத்து, ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ”வருணன்”. இப்படத்தில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ராதா ரவி, சரண்ராஜ், மகேஷ்வரி, கேப்ரியல்லா உள்ளிட்டோர் நடத்துள்ள இந்த வருணன் நாளை வெளியாகிறது.

நடிகர் ரியோராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி நடித்து, ஸ்வைத் எஸ். சுகுமார் இயக்கத்தில் காதல் நகைச்சுவைப் படமான ”ஸ்வீட் ஹார்ட்” படமும் நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ”பெருசு” படமும் ரிலிஸ் செய்யப்படுகிறது.

மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள ”ராபர்” என்ற படத்தில், சத்யா, டேனி, நிஷாந்த உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இப்படமும் நாளை வெளியாகிறது.

இதேபோல், குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்களும், சிவகார்த்திக்கேயன் நடித்த ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்கள் நாளை ரீ-ரிலீஸ் ஆகின்றன.

For more details and updates, visit Thagavalulagam regularly!