India News

பாஸ்போர்ட் விதிகளில் மத்திய அரசு செய்த 4 மாற்றம் என்ன தெரியுமா மக்களே?


பாஸ்போர்ட் விதிகளில் மத்திய அரசு செய்த 4 மாற்றம் என்ன தெரியுமா மக்களே?

இந்தியாவில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தவர்கள் புதிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

என்ன என்ன மாற்றம்?

1. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போஸ்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் வழங்கும் பிறப்பு சான்றிதழ்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது என அரசு கூறியுள்ளது.

2.பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்ட முகவரி, பாஸ்போர்டில் அச்சிடப்படாது. அதற்கு பதில்,குடியுரிமை அதிகாரிகள் மட்டும் அறியும் வகையில், QR & Barcode அச்சிடப்பட உள்ளது.

3. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறம் மற்றும் குடிமக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

4.பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பெற்றோரின் பெயர்கள் இனி இருக்காது. இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்களை தேவையற்ற முறையில் வெளியிடுவதைத் தடுக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

என்ன ஆவணங்களைக் கொண்டு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் ?

1. பான் கார்டு
2.ஓட்டுநர் உரிமம். 
3.வாக்காளர் அடையாள அட்டை
4.LIC பாலிசி பத்திரம்

தனியுரிமையை பாதுக்கவே இந்த புதிய விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!