India News

இந்தியாவில் X தளம் முடக்கம்?


இந்தியாவில் X தளம் முடக்கம்?

இந்திய அரசுக்கும், X நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், x தளத்துக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமூக வலைதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், அரசியல் விவாதங்கள் புதிய வடிவம் பெற்றுள்ளன. குறிப்பாக, X தளத்தில் செயல்படும் Grok AI பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் சிறந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு குரோக் "கருணாநிதி" என பதிலளித்துள்ளது. இதை அரசியல்வாதிகள் பலர் எதிர்க்க, சமூக வலைதள பயனர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.

அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய குரோக் 3

கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான குரோக் ஏஐ, சமீபத்தில் அதன் மூன்றாவது பதிப்பான Grok 3-ஐ வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பு, அரசியல், சமூக மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் துல்லியமான பதில்களை வழங்குகிறது. X தளத்தில் @grok எனப் பதிவு செய்து எந்தவொரு பயனரும் கேள்விகளை எழுப்ப முடியும், மேலும், சிறிது நேரத்தில் அதற்கான பதில்களும் கிடைக்கின்றன. இது பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், அரசியல் வாதிகளுக்கு கவலையாக மாறியுள்ளது.

மத்திய அரசின் எதிர்வினை

Grok AI அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய பதில்களை அளிப்பதால், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் X நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வ அறிக்கை கேட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் Grok பதில் அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை அரசியல் வாதிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் தகவல் பரப்பலுக்கான நெருக்கடியாக பார்க்கிறார்கள்.

கருத்து சுதந்திரத்திற்கு தடையாக மத்திய அரசு?

X நிறுவனம், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. X நிறுவனம் தரப்பில், மத்திய அரசு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், Grok AI செயலியை தணிக்கை செய்ய அரசு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை இருக்க வேண்டும் என்பதே X நிறுவனத்தின் நிலைப்பாடு.

Grok AI-யின் வரவேற்பு

Grok AI, அரசியல், அறிவியல், கலை, விளையாட்டு, சர்வதேச விவகாரங்கள் என பல்வேறு துறைகளில் தகவல் வழங்குகிறது. பயனர்கள் இதனை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரசியல் விவாதங்களுக்கு இது மிகப்பெரிய பலமாக உள்ளது. X தளத்தின் CEO எலான் மஸ்க், Grok AI கருத்து சுதந்திரத்தின் வழிகாட்டியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் வாதிகளின் எதிர்ப்பு

Grok AI அரசியல் தொடர்பாக பதிலளிப்பதை சில அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. அரசியல்வாதிகளுக்கு எதிரான பதில்கள், குறிப்பாக பதவி வகிக்கும் அரசியல்வாதிகளுக்கான பதில்கள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. சிலர், Grok AI தவறான தகவல்களை பரப்புகிறது என குற்றம்சாட்ட, மற்றவர்கள், இது உண்மைகளை வெளிப்படுத்துகிறது என ஆதரிக்கின்றனர். இதனிடையே X தளத்துக்கு தடை விதிப்பது குறித்து மத்திர அரசு தடை விதிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

For more details and updates, visit Thagavalulagam regularly!