Sports News

CSK-MI டிக்கெட் விற்பனை தொடக்கம்


CSK-MI டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை-மும்பை ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐபிஎல் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. கொல்த்தாவில் நடக்கும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. வரும் மார்ச்.23ஆம் தேதி சென்னை-மும்பை அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை தொடங்கியுள்ளது. சென்னை -மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 2 டிக்கெட்களை மட்டுமே வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ஆன்லைலின் டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. மாலை 5 மணி முதல் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!