Political News

முதல்வர் VS ஈபிஎஸ் வார்த்தை மோதல்


முதல்வர் VS ஈபிஎஸ் வார்த்தை மோதல்

தமிழகத்தில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2025-26 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒரே நாளில் 4 கொலைகள் நடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்கள் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சாத்தான் குளம் பிரச்னையை நீங்கள் மறந்துவிடக்கூடாது எனக் கூறினார்.  

தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையை விட்டுச் சென்றனர். தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது.  2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு என்றார். 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது எனக் கூறிய முதல்வர், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது எனவும் முதல்வர் கூறினார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!