World News

214 பேரை கொன்ற பலுச் விடுதலை ராணுவம்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்


214 பேரை கொன்ற பலுச் விடுதலை ராணுவம்.. அதிர்ச்சியில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் விவகாரத்தில் பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பணையக்கைதிகள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக BLA (balochistan liberation army) அமைப்பு அறிவித்துள்ளது.

கிளர்ச்சி படையால் வேறு  எந்த பணைய கைதிகளும், கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கே எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ள பாகிஸ்தான் ராணுவம், இந்த தாக்குதலில் 23 வீரர்கள், 5 பயணிகள், 3 ரயில்வே பணியாளர்கள் என 31 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது.

மார்ச்.11ஆம் தேதி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 பெட்டிகளுடன் 500 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், போலான் கணவாய் பகுதி சுரங்கப் பாதையில் வந்து கொண்டிருந்ததது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஆனால் பயணிகளுக்கு சிறிது நேரத்தில் தான் தெரிந்தது இது விபத்து அல்ல. பலூச் விடுதலை படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெடி வைத்து ரயிலை ஹைஜாக் செய்துள்ளனர் எனத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த ரயிலில் பயணம் செய்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், பலூச் விடுதலை படையைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு துப்பாகிச்சூடு நடந்தது. இதில், 30 பாகிஸ்தான் வீரர்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பயணம் செய்த 500க்கும் மேற்பட்ட பயணிகளை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

இந்த நிலையில், பயணிகளை மீட்க பாகிஸ்தான் ராணுவப் படை களத்தில் இறங்கியது. மீண்டும் இருதரப்புக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, 190க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.

இந்நிலையில், BLA அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 214 பேர் தூக்கிலிடப்பட்டதாக கூறியுள்ளது பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!