மத்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏடிஎம் பணப் பரிவர்த்தனை கட்டணங்களை மே 1, 2025 முதல் மாற்றியமைத்துள்ளது. புதிய கட்டண உயர்வுகள் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் முறை மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு விதிக்கப்படுகின்றன.
புதிய கட்டண மாற்றங்கள்
சொந்த வங்கி ஏடிஎம்: மாதம் 5 முறை இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 (முந்தைய கட்டணம் ரூ.21).
பிற வங்கி ஏடிஎம்
மெட்ரோ நகரங்கள்: மாதம் 3 முறை இலவசம். அதன் பிறகு ரூ.19 (முந்தைய கட்டணம் ரூ.17).
மெட்ரோ அல்லாத நகரங்கள்: மாதம் 5 முறை இலவசம். அதன் பிறகு ரூ.19.
இருப்பு சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட்: பரிவர்த்தனை கட்டணம் ரூ.7 (முந்தைய கட்டணம் ரூ.6).
இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை தாண்டினால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
பணம் எடுப்பது மட்டுமின்றி, இருப்பு சரிபார்த்தல் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் போன்றவை கூட ஒரு பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்த மாற்றங்கள் வங்கி சேவைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக RBI தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களின் பரிவர்த்தனைகளை திட்டமிட வேண்டும்.