Cinema News

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (மார்ச் 16) அனுமதிக்கப்பட்டார்.

மற்றுமொரு தகவலின்படி, காலை 7.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

ரஹ்மானின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அல்லது மருத்துவமனை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இது குறித்து மேலும் தகவல் கிடைக்கும்போது வெளியிடப்படும்.

ரஹ்மானின் உடல்நிலை சீக்கிரம் மீள ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

For more details and updates, visit Thagavalulagam regularly!