சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் லீக் ஆட்டத்தில், MI அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி CSK அணி வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்:
டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த CSK, தொடக்கத்திலேயே MI அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. ரோகித் சர்மா (0) டக் அவுட் ஆக, ரியான் ரிக்கல்டன் (13) மற்றும் வீல் ஜாக்ஸ் (11) விரைவில் வெளியேறினர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் (29) நிதானமாக விளையாடிய போதிலும், அணியின் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை. திலக் வர்மா (31) மட்டும் சிறப்பாக ஆடிய நிலையில், தீபக் சகார் (28) இறுதியில் சில முக்கிய ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் MI அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தன. CSK பந்து வீச்சில், நூர் அகமது 4 விக்கெட்டுகளும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சிஎஸ்கே இன்னிங்ஸ்:
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தது. ராகுல் திருப்பாதி (2) விரைவில் வெளியேறினார். ஆனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (53) அதிரடியாக விளையாடி அணியை முன்னிலைப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா (65) இணைந்து முக்கிய கூட்டணியை அமைத்தார். சிவம் துபே (9), தீபக் ஹூடா (3), சாம் கரண் (4) ஆகியோர் விரைவில் வெளியேறினாலும், கடைசிவரை களத்தில் நின்ற ரச்சின் ரவீந்திரா வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா (17) சில முக்கிய ரன்கள் சேர்த்தார்.
வெற்றி மற்றும் புள்ளி நிலை
சிஎஸ்கே 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 2 பந்துகளை சந்தித்தபோதும், ரன் எடுக்கவில்லை. இந்த வெற்றியுடன், சிஎஸ்கே மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளன.