Tamilnadu News

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: அரசு அசத்தல் அறிவிப்பு


கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: அரசு அசத்தல் அறிவிப்பு

ரூ.2000 கோடி  மதிப்பில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறித்தார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட் உரையை 2.33 மணி நேரத்தில் நிறைவு செய்தார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேலும் சில முக்கிய அறிவிப்புகள்

1.நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு மேலும் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும்

2.வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் 
நிரப்பப்படும்

3.இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்துக்கான தினசரி உதவி தொகை 150ல் இருந்து 500 ஆக உயர்வு

4.திருவான்மியூர், பாலவாக்கம், குலசேகரபட்டினம் உள்ளிட்ட 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி

5.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்

6.2,000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்

7.சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்

8.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

9.சென்னை அருகே அதி நவீன உயிரி அறிவியல் பூங்கா அறிவிக்கப்படும்

10.பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைவு

11. ECR சாலையில் மேம்பாலம் அமைக்க ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு

12.500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது

13.193 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்

14.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

15.தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்

16.கோவை, சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும்

17.அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் வரை சரண் செய்து பணபலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

18.ரூ.2000 கோடி ஒதுக்கீடு மதிப்பில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் 

19.சென்னைக்கு அருகே புதிய நகரம் 2000 ஏக்கரில் உருவாக்கப்படும்.

For more details and updates, visit Thagavalulagam regularly!