சென்னை: குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது குழந்தைப் பருவ அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch பற்றி விளக்கிக்கொடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது குழந்தைப் பருவ அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch பற்றி விளக்கிக்கொடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைப் பருவ அனுபவம்
ஒரு நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய வரலட்சுமி, "என் அப்பா, அம்மா வேலைக்குச் செல்லும்போது, என்னை பலரின் வீட்டில் பார்த்துக்கொள்ளச் சொல்லி விடுவார்கள். அப்போது 5 அல்லது 6 பேர் என்னை தவறாக நடத்தினர். எனக்கு குழந்தைகள் இல்லை, ஆனால் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
பெரியவர்களுக்கு வரலட்சுமி வேண்டுகோள்
"குழந்தைகள் எந்தவொரு சங்கடத்தையும் பெற்றோர்களிடம் சொல்ல தைரியம் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர்களும் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும்," எனவும் வரலட்சுமி தெரிவித்தார்.
இந்த நிகழ்வு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கட்டாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை மீண்டும் உணர்
த்தியுள்ளது.